உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மணிவிழா கண்ட 50 தம்பதிக்கு சீர்வரிசை வழங்கி கவுரவிப்பு

மணிவிழா கண்ட 50 தம்பதிக்கு சீர்வரிசை வழங்கி கவுரவிப்பு

சேலம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மணிவிழா கண்ட, 70 வயது பூர்த்தியான, ஆன்மிக ஈடுபாடுள்ள தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நேற்று, சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில் மணிவிழா கண்ட, 50 தம்பதிகளுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சீர்வரிசை வழங்கி கவுரவித்தார். ஒவ்வொருவருக்கும் வேட்டி, சட்டை, புடவை, மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல், சுவாமி படங்கள் வழங்கப்பட்டன. உபயதாரர்களால், பித்தளை செம்பு, ஹாட்பாக்ஸ், டம்ளர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமசந்திரன், அறநிலையத்துறை இணை கமிஷனர் சபர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை