மேலும் செய்திகள்
பைக் வாங்க ஆசை; சங்கிலி பறித்தவர் கைது
13-Oct-2025
சேலம் சேலம், இரும்பாலை, மோகன் நகரை சேர்ந்தவர் தீபாகுமாரி, 50. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று மாலை, 6:30 மணிக்கு, 'டி.வி.எஸ்., பெப்ட்' மொபட்டில், சேலம் - தாரமங்கலம் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த, 2 பேர், தீபாகுமாரியை வழிமறித்து நிறுத்தி, அவர் அணிந்திருந்த, 7 பவுன் தாலி கொடி சங்கிலியை பறிக்க முயன்றனர். தீபாகுமாரி, சங்கிலியை பிடித்து கூச்சலிட்டார். ஆனாலும் அவரது சங்கிலியை பறித்து தப்பினர். இதில், முக்கால் பவுன் மட்டும் கையில் சிக்க, 6.2 பவுன் பறிபோனது. இதுகுறித்து தீபாகுமாரி புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Oct-2025