7 நலவாழ்வு மையத்தில் பணி1,000 தாண்டிய விண்ணப்பம்
7 நலவாழ்வு மையத்தில் பணி1,000 தாண்டிய விண்ணப்பம்சேலம்:சேலம் மாநகராட்சியில், புதிதாக திறக்கப்பட்ட ஏழு நகர்ப்புற நலவாழ்வு மையங்களில், 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், மருத்துவ பணியாளர் என தலா, 7 பேர் வீதம் 28 பேர், மாவட்ட தர ஆலோசகர், மருந்தாளுனர், உதவி கணக்காளர், ஆடியோலாஜிஸ்ட், பல் மருத்துவ உதவியாளர், தடுப்பூசி மேலாளர், மகப்பேறு உதவியாளர், துாய்மை பணியாளர் என, தலா ஒருவர் வீதம், 8 பேர் நியமனம் செய்யப்படுகின்றனர்.எம்.பி.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்றவர் மருத்துவர் அலுவலர் பணிக்கும், டிப்ளமோ நர்சிங் படித்தவர் செவிலியர் பணி, டி.பார்ம் படித்தவர் மருந்தாளுனர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த 13 முதல், இதுவரை, 1,000க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் சரிபார்ப்பு பணி, இன்று நடக்கிறது. தகுதியானவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். ஏப்.,1ல் நேர்காணல் நடத்தப்பட்டு, மறுநாள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இது தற்காலிக பணி,' என்றனர்.