மேலும் செய்திகள்
தோட்டத்தில் தீப்பிடித்து வைக்கோல் கட்டு நாசம்
03-Nov-2025
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி, தெற்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், 50. இவரது தோட்டத்தில் மலைப்பாம்பு உள்ளதாக, நேற்று கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தோட்டத்தில் இருந்த, 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, கெங்கவல்லி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின், வனப்பகுதியில் மலைப்பாம்பை விட்டனர்.ஓணானை விழுங்கிய பாம்புஆத்துார், கொத்தாம்பாடி, பெரியார் நகரை சேர்ந்தவர் சந்திரா, 40. இவரது வீட்டின் பின் பகுதியில் உள்ள மரத்தில், நேற்று மாலை, 4:00 மணிக்கு சத்தம் கேட்டது. அங்கு சென்று சந்திரா பார்த்தபோது, ஓணானை விழுங்கிய நிலையில் பச்சை நிறத்தில் பாம்பு இருந்தது. அவர் தகவல்படி, அங்கு சென்ற ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், 4 அடி நீள பாம்பை உயிருடன் பிடித்தனர். பின் ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
03-Nov-2025