உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆசிரியை வீட்டில் 8 பவுன் திருட்டு

ஆசிரியை வீட்டில் 8 பவுன் திருட்டு

சேலம், சேலம், அஸ்தம்பட்டி, கங்கா நகரை சேர்ந்த, ரவி மனைவி வசந்தி, 36. தனியார் பள்ளி ஆசிரியையான இவர், வாடகை வீட்டில் வசிக்கிறார். கடந்த, 4ல் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னல் அருகே வைத்து விட்டு பள்ளிக்கு சென்றார். பள்ளி முடிந்து, மாலை வீட்டுக்கு வந்தபோது, கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, 'ப்ரிட்ஜ்' மீது வைத்திருந்த, 8 பவுன் தங்க சங்கிலி திருடுபோனது தெரிந்தது. அவர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை