உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 6 ஆண்டாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் சேலத்தில் தங்கிய வங்கதேசத்தவர் கைது

6 ஆண்டாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் சேலத்தில் தங்கிய வங்கதேசத்தவர் கைது

6 ஆண்டாக பாஸ்போர்ட், விசா இல்லாமல்சேலத்தில் தங்கிய வங்கதேசத்தவர் கைதுசேலம், நவ. 15-போலியாக ஆதார் கார்டு பெற்று, பாஸ்போர்ட், விசா இல்லாமல், சேலத்தில், 6 ஆண்டுகளாக தங்கி பணிபுரிந்த வங்கதேச தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.சேலம், கோரிமேடு அருகே செட்டிச்சாவடி, குண்டத்துமேட்டில் தனியார் நிறுவனம் உள்ளது. அங்கு, வெளி மாநில தொழிலாளர்கள், 125 பேர் தங்கி பணிபுரிகின்றனர். அங்கு கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, ஜாபர்அகமது, 44, என்பவர் பெங்களூருவை சேர்ந்தவர் என்றும், ஆதார் கார்டை கொடுத்து, 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. அவரது நடவடிக்கைகளை கண்காணித்த போலீசார், தொடர்ந்து விசாரித்தனர். இதையடுத்து அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வங்காளதேச நாட்டின் குமில்லா மாவட்டம் ஸ்ரீபூரை சேர்ந்தவர் ஜாபர் அகமது, 44. இவருக்கு திருமணமாகி இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். குடும்பத்தினர், வங்காளதேசத்தில் வசிக்கும் நிலையில், ஜாபர் அகமது எந்த ஆவணமின்றி கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்து, 7 மாதங்கள் தங்கியிருந்து, அங்கு ஆதார் கார்டு பெற்றுள்ளார். பின் சேலம் வந்த அவர் தனியார் நிறுவனத்தில் தையல் பணி செய்து வந்தார். இங்கு, 6 ஆண்டுகளாக பணிபுரிந்தார். ஆனால் இந்தியாவில் நுழைந்து கர்நாடகா வந்து, அங்கு போலியாக ஆதார் அட்டை பெற்று சேலத்தில் வேலை பார்த்தது தெரியவந்தது. இதனால் அவரை கைது செய்து அவரிடம் இருந்த மொபைல் போன், ஆதார் கார்டை கைப்பற்றி விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ