உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் ஓடும் காரில் தீ; ௩ பேர் தப்பினர்

சேலத்தில் ஓடும் காரில் தீ; ௩ பேர் தப்பினர்

சேலம்: சேலத்தில், நேற்றிரவு ஓடும் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிர் தப்பினர்.கோவை, நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அன்சர், 52; இவர் மனைவி ராகிலா, 48; இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், சேலத்தில் சிகிச்சை அளிக்க மாருதி எர்ட்டிகா காரில், மகன் முகம்மது அன்வர், 21, என்பவருடன் நேற்று முன்தினம் சேலம் வந்தனர். ஐந்து ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்கினர்.பின்னர் காரில் பிரணவ் மருத்துவமனைக்கு நேற்று காலை சென்று ராகிலாவுக்கு சிகிச்சை அளித்தனர். மாலை, 6:00 மணிக்கு வின்சென்டில் உள்ள சாரோ ேஹாமியோபதி கிளினிக்குக்கு சென்று விட்டு, சாரதா கல்லுாரி சாலையில் உள்ள ஓட்டலுக்கு இரவு, 7:25 மணிக்கு திரும்பினர். சாரதா கல்லுாரி எதிரில் கார் வந்த நிலையில், இன்ஜினில் இருந்து புகை வெளியேறியது. இதனால் சாலையில் நிறுத்தி விட்டு, மூவரும் அலறியடித்து வெளியேறிய நிலையில், தீப்பிடித்து எரிந்தது.செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள், 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தால், சாரதா கல்லுாரி சாலையில், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை