நிலத்தரகு தொழிலாளர்களை பாதுகாக்க தனி சட்டம் தேவை
சேலம்: தமிழக நில தரகர் நலச்சங்கத்தின், சேலம் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம், சிவதாபுரத்தில் நேற்று நடந்தது. மாநில பொருளாளர் வரதராஜன் தலைமை வகித்தார்.அதில் மாநில தலைவர் அண்ணாதுரை பேசுகையில், ''சங்கம் தொடங்கி, பதிவுத்துறை மூலம் உரிமம் கேட்டும், தமிழ்நாடு அமைப்புசாரா பட்டியலில் இணைப்பதுடன், தனியே நல வாரியம் ஏற்படுத்த தொடர்ந்து மன்றாடி வருகிறோம். நிலத்தரகர்களின் வாழ்வாதாரம் கருதி, தொழில் பாதுகாப்பு சட்டம் உடனே தேவை,'' என்றார்.தொடர்ந்து ஏப்., 20ல் நிலத்தரகர் தினம் கொண்டாடுவது; நிலத்தரகர் பெயரில் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது; நிலத்தரகு தொழிலாளர்களுக்கு சட்டம் கொண்டு வர தமிழக அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கொள்கை பரப்பு செயலர் நடராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நமச்சிவாயம், கணேசன், மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.