ஏ.பி.வி.பி., மாநாடு வரும் 19ல் தொடக்கம்
சேலம்: சேலத்தில் வரும், 19 முதல், 21 வரை, அகில பார-தீய வித்யார்த்தி பரிஷத் மாநில மாநாடு நடக்க உள்ளது.இதுகுறித்து, ஏ.பி.வி.பி., வட தமிழக மாநில செயலர் தாமோதரன் அறிக்கை: 'வடதமிழ-கத்தின் சிறந்த தமிழகத்துக்கான இளைஞர்கள்' தலைப்பில், 31வது மாநில மாநாடு வரும் 19 முதல், 21 வரை, சேலம் சோனா கல்லுாரி எதிரே உள்ள திருமலை அம்மாள் திருமண மண்ட-பத்தில் நடக்க உள்ளது. அதில் மாநிலத்தின் கல்வி, சமூக பிரச்னை குறித்த விவாதங்கள், கருத்தரங்குகள் நடக்கும். தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். சென்னை முதல் ஈரோடு வரை அனைத்து மாவட்டங்களில் இருந்து, மாணவர்கள் பங்கேற்பர்.