உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆர்ப்பாட்டத்துக்கு வந்தபோது விபத்து ; வி.சி., கட்சியினர் 28 பேர் காயம்

ஆர்ப்பாட்டத்துக்கு வந்தபோது விபத்து ; வி.சி., கட்சியினர் 28 பேர் காயம்

சேலம் : சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கலவரத்துக்கு எதிராக, வி.சி., சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநகர செயலர் காஜாமைதீன் தலைமை வகித்தார். அதில், தலித்துகளை தாக்கிய போலீசாரை கண்டித்தும், வழிபாட்டு உரிமையை மீட்க, கைதானவர்களை விடுவிக்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதில் பொதுச்செயலரான, எம்.பி., ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக தீவட்டிப்பட்டியில் இருந்து மாலை, 5:15 மணிக்கு, பஸ்சில் ஆர்ப்பாட்டத்துக்கு புறப்பட்டனர். மாமாங்கம் அருகே வந்த பஸ், அங்கு சிக்னலில் நின்றிருந்த, பெட்ரோல் டேங்கர் லாரியின் பின்புறம் மோதியது. அதில் பஸ்சில் இருந்த கட்சியினர், 28 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் லதா, 43, வசந்தா, 50, ஆகியோர், உள்புற நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று திரும்பினர். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை