மேலும் செய்திகள்
குட்டையில் திடீரென நீர்மட்டம் உயர்வு
15-Feb-2025
சேலம்: தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில், விவசாயிகள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.இதையடுத்து தங்கராஜ் கூறியதாவது:அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் செல்லும், திருமணிமுத்-தாற்றின் நீரை கொண்டு விவசாயம் செய்கிறோம். அதே பகு-தியில் செயல்பட்டு வரும், தனியார் டையிங் ஆலைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சாயக்கழிவு நீரை சுத்திக-ரிக்காமல் அப்படியே வெளியேற்றி வருகின்றனர். இது பல ஆண்-டுகளாக தொடர்கிறது. சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீர் கலப்-பதால் ராஜ வாய்க்கால் பாசனம் செய்யும் விவசாயிகள், நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.ரசாயன கழிவுகளால் நிலத்-தடி நீர் மட்டம், விவசாய கிணறுகள், போர்வெல் நீர் முழுவதும் மாசடைந்து உள்ளது. இதனால் ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்கள் சேதமடைவதால் விவ-சாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை வெளியேற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.
15-Feb-2025