பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை
பல்வேறு பணிகளைமேற்கொள்ள நடவடிக்கைபனமரத்துப்பட்டி, நவ. 21-பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வாழக்குட்டப்பட்டி, நிலவாரப்பட்டி, சந்தியூர், தாசநாயக்கன்பட்டி, பெரமனுார், குரால்நத்தம், திப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகள், 2025 - 26ம் ஆண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்திட்டத்தில் ஒரு ஊராட்சிக்கு தலா, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதற்கான பணிகளை தேர்வு செய்வதில், ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.நேற்று, பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன், குரால்நத்தம் ஊராட்சி ஜருகுமலையின் கீழூரில் கதிரடிக்கும் களம், தெருவிளக்கு, சாலை உள்ளிட்டப்பணிகளை தேர்வு செய்ய ஆய்வு செய்தார். வாழக்குட்டப்பட்டியில் ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.