தன்பாத் - ஆலப்புழா ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
சேலம்: சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியே இயக்கப்படும் தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில், நாளை முதல், 2ம் வகுப்பு பொதுப்பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படும்.அதேபோல் மறுமார்க்க ரயிலில், வரும், 29 முதல், கூடுதல் பெட்டியுடன் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.