எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு
சேலம், சேலம் வழி ரயில்களில், கூடுதல் ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் ரயில் தினமும் மதியம், 3:20 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு வழியே அடுத்த நாள் காலை, 7:45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இதில், ஜூன் 26 வரை தற்காலிகமாக இரண்டடுக்கு ஏசி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரயில் தினமும் மாலை, 5:15 மணிக்கு புறப்பட்டு கோவை, ஈரோடு, சேலம் வழியே அடுத்த நாள் காலை, 10:00 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயிலில், ஜூன் 27 வரை தற்காலிகமாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. சென்னை - ஆலப்புழா ரயில் தினமும் இரவு, 8:55 மணிக்கு கிளம்பி சேலம், ஈரோடு, கோவை வழியே அடுத்த நாள் காலை, 10:40 மணிக்கு ஆலப்புழா சென்றடையும். இந்த ரயிலில் ஜூன், 24 வரை, ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் ரயில் தினமும் மாலை, 3:20 மணிக்கு கிளம்பி, கோவை, ஈரோடு, சேலம் வழியே அடுத்த நாள் காலை, 5:15 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த ரயிலில் ஜூன், 25 வரை தற்காலிகமாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி, கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.