உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., கவுன்சிலர் எதிர்ப்பு ஒன்றிய கூட்டம் ஒத்திவைப்பு

தி.மு.க., கவுன்சிலர் எதிர்ப்பு ஒன்றிய கூட்டம் ஒத்திவைப்பு

ஓமலுார், சேலம் மாவட்டம் ஓமலுார் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடக்கவிருந்தது. இதற்குரிய கூட்ட தீர்மான நகல் கடந்த, 25ல் கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய கவுன்சிலர் சிவஞானவேல், 'கூட்டம் நடப்பதற்கு, 7 நாட்களுக்கு முன் தீர்மான நகல் வழங்க வேண்டும் என்பது விதி. ஒரு நாளைக்கு முன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெளியூரில் உள்ளேன். என் பகுதி குறைகளை சுட்டிக்காட்ட முடியாது என்பதால் கூட்டத்தை வேறு நாள் மாற்ற வேண்டும்' என, ஓமலுார் பி.டி.ஓ.,வுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதேபோல், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.இதையடுத்து நேற்று நடக்கவிருந்த கூட்டம் நிர்வாக காரணத்தால் ரத்து செய்யப்பட்டு, ஜூலை, 16ல் நடக்க உள்ளதாக, ராஜேந்திரன், அறிவிப்பு கடிதத்தை, அனைத்து கவுன்சிலர்களுக்கும் அனுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை