ஆத்துார் : அ.தி.மு.க.,வின், ஆத்துார் நகர, ஒன்றியம் சார்பில் நரசிங்கபுரம், உடையார்பாளையம், மஞ்சினி உள்பட, 10 இடங்களில் நேற்று தண்ணீர் பந்தலை, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் திறந்து வைத்தார். தொடர்ந்து மக்களுக்கு, நீர், மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளை வழங்கினார். ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதேபோல் ஆத்துார் நகர தி.மு.க., சார்பில் உடையார்பாளையம், பழைய பஸ் ஸ்டாண்ட், காமராஜர் சாலை, புதுப்பேட்டை உள்பட, 7 இடங்களில், தண்ணீர் பந்தலை, சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் திறந்து வைத்து மக்களுக்கு, மோர், பழ வகைகளை வழங்கினார். ஆத்துார் நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா, நகர செயலர் பாலசுப்ரமணியம், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.ஓமலுார்ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே, தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில் சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன் திறந்து வைத்து, மக்களுக்கு நீர் மோர், கம்மங்கூல், தர்பூசணி, நுங்கு ஆகியவற்றை வழங்கினார். மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி, ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி, நகர செயலர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.