உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 50ம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாட ஆலோசனை

50ம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாட ஆலோசனை

50ம் ஆண்டு பொங்கல் விழாகொண்டாட ஆலோசனைஆத்துார், நவ. 10-ஆத்துார் நகர பொங்கல் விழா கழகம் சார்பில், ஆத்துாரில் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், வீரம் என, தமிழ் கலாசார போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2025 ஜனவரியில், 50ம் ஆண்டு பொங்கல் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து, ஆத்துாரில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.தி.மு.க.,வின் மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம் தலைமை வகித்தார். அதில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து ஆலோசித்தனர். கழக தலைவர் ஆறுமுகம், துணை செயலர்கள் சந்திரன், ராஜசேகர், ரவி, நிர்வாக குழுவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை