உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாடங்களை புரிந்து படிக்க பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை

பாடங்களை புரிந்து படிக்க பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை

ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்-பள்ளி மாணவ, மாணவியர் திறன்களை ஊக்குவிக்க, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நேற்று நடந்த விழாவில், பெங்களூருவில் உள்ள, 'இஸ்ரோ' தொழில்நுட்ப விஞ்ஞானி பரமசிவம், மாணவர்களிடம் கலந்துரையாடினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது:அதிக மதிப்பெண் வாங்குவதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகி-றோமோ, அதே அளவு, அடிப்படை பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். அப்போது தான் நாம் எழுத்து, நேர்முகத்தேர்வில் கடி-னமான கேள்விக்கும் பதில் அளிக்க முடியும். பேச்சு திறமை, ஆங்கில மொழி அறிவு ஆகியவற்றுடன் நவீன தொழில்நுட்பங்-களை அறிந்து கொள்ள வேண்டும். 'இஸ்ரோ' நிறுவனம், மாண-வர்களுக்கு கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். தலைமை ஆசிரியர் நாகேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ