30,000 பேருடன் குழு அ.தி.மு.க., ஆலோசனை
பனமரத்துப்பட்டி: வீரபாண்டி சட்டசபை தொகுதி, பனமரத்துப்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியஅ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம், அமானிகொண்டலாம்பட்டியில் நேற்று நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ., ராஜமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலர் ஜெயகாந்தன் ஆகியோர், ஆலோசனை வழங்கினர்.மேலும் தொகுதிக்கு உட்பட்ட, 299 ஓட்டுச்சாவடிக்கு, 30,000 உறுப்பினர்களின் மொபைல் எண்களை பெற்று, வாட்ஸாப் குழு தொடங்கி, அதன் மூலம் தேர்தல் பிரசாரம் செய்ய ஆலோனை வழங்கப்பட்டது. ஒன்றிய செயலர்கள் ஜெகநாதன், பாலச்சந்திரன், மல்லுார் நகர செயலர் பழனிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.