உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனி நபருக்கு ஆதரவாக தீர்மானம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தனி நபருக்கு ஆதரவாக தீர்மானம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ஆத்துார்: தனி நபருக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வருவதாக கூறி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.சேலம் மாவட்டம் ஆத்துார் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவி நிர்மலாபபிதா தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., கவுன்சிலர் உமாசங்கரி: பழைய பஸ் ஸ்டாண்ட் வெளியே, 4 கடைகளை, குத்தகை எடுத்தவர், மேற்கூரை, கீழ் தளம் அமைக்க மனு அளித்துள்ளார். இதுபோன்று தனிநபர் பணி-களை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது. அதேபோல் கட்டண கழிப்பிடம் குத்தகை எடுத்தவர்களே செலவு செய்து கொள்-ளலாம் என, தீர்மானம் உள்ளது. நகராட்சி மூலம் மீண்டும் செலவு செய்யும்போது தணிக்கை நடக்கும்போது, அத்தொ-கையை கவுன்சிலர் பொறுப்பேற்கும் நிலை ஏற்படும். தனி நப-ருக்கு ஆதரவாக, இக்கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும்.கமிஷனர் சையது முஸ்தபா கமால்: பணிகள் தொடர்பாக நிபந்த-னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜேஷ்குமார்: நகராட்சியில் சொத்து, தொழில் வரி வசூல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியா-ளர்கள், மீண்டும் அப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நக-ராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியது குறித்து தகவல் தெரிவிக்க-வில்லை.கமிஷனர்: ஓய்வு பெற்றவர்கள், அவர்களது பணி அனுபவத்தை கொண்டு தற்காலிக பணியாக ஒப்பந்த முறையில் வழங்கப்பட்-டுள்ளது.பின், தி.மு.க., கவுன்சிலர்கள் தங்கவேல், சங்கர், சம்பத் உள்-ளிட்டோர், 'அ.தி.மு.க.,வினர் பொய் தகவல்களை கூறி வருகின்-றனர்' என, கூச்சல் எழுப்பினர். இதனால், அ.தி.மு.க., கவுன்சி-லர்கள் உமாசங்கரி, ராஜேஷ்குமார், கலைச்செல்வி ஆகியோர், தனிநபருக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வருவதை கண்-டித்து, வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர். ஆனால், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை