உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடங்கணசாலை நகராட்சியை முற்றுகையிட்ட அ.தி.மு.க.,வினர்

இடங்கணசாலை நகராட்சியை முற்றுகையிட்ட அ.தி.மு.க.,வினர்

இடங்கணசாலை தமிழகம் முழுவதும், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி மற்றும் அமைப்புகளின் கொடி கம்பங்கள், பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் கட்சிகளின் கொடி கம்பங்கள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படவில்லை. இது குறித்து அனைத்து கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு, கடந்த வாரம் இடங்கணசாலை நகராட்சி கமிஷனர் பவித்ரா அழைப்பு விடுத்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இடங்கணசாலை அ.தி.மு.க., நகர செயலர் சிவலிங்கம் தலைமையில், 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் நகராட்சி தலைவரை சந்தித்த கட்சியினர், பல இடங்களில் ஒரு கம்பத்தை கூட இதுவரை அகற்றவில்லை. விபத்தை ஏற்படுத்தும் விதமாக பிளக்ஸ் பேனர் வைப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என கூறினர்.கமிஷனர் பவித்ரா கூறுகையில், ''விரைவில் வருவாய்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ