உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செங்கோட்டையன் பதவி பறிப்பு அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

செங்கோட்டையன் பதவி பறிப்பு அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

சேலம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின், அ.தி.மு.க., அமைப்பு செயலர், ஈரோடு புறநகர் மாவட்ட செயலர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக, அக்கட்சி பொதுச்செயலர், இ.பி.எஸ்., அறிவித்தார். அதை வரவேற்று, சேலம், அண்ணா பூங்கா அருகே, மாநகர் மாவட்ட செயலர் பாலு தலைமையில் திரண்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், பட்டாசு வெடித்து இ.பி.எஸ்.,க்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன் உள்ளிட்ட கட்சி முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !