உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இ.பி.எஸ்., வரவேற்பு பேனர் கிழிப்பு போலீசில் அ.தி.மு.க.,வினர் புகார்

இ.பி.எஸ்., வரவேற்பு பேனர் கிழிப்பு போலீசில் அ.தி.மு.க.,வினர் புகார்

நாமக்கல் :இ.பி.எஸ்., வரவேற்பு பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.தி.மு.க.,வினர் போலீசில் புகாரளித்துள்ளனர்.அ.தி.மு.க., பொதுச்செயலார் இ.பி.எஸ்., 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், வரும், 19, 20, 21 என, மூன்று நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதற்காக, கட்சியினர் மாவட்டம் முழுவதும், இ.பி.எஸ்.,யை வரவேற்று பிளக்ஸ் பேனர்களை வைத்து வருகின்றனர்.நாமக்கல் சட்டசபை தொகுதியில், வரும், 20ல் பிரசாரம் செய்கிறார். அதற்காக, நாமக்கல் நகரம் மற்றும் சட்டசபை தொகுதி முழுவதும், அக்கட்சியினர் பிளக்ஸ் பேனர் வைத்து வருகின்றனர். நாமக்கல்-சேலம் சாலை சென்டர் மீடியனில், அ.தி.மு.க., வர்த்தக அணி மாநில இணை செயலாளர் மோகன், 30க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தார். இவரது பிளக்ஸ் பேனர்களை, மர்மநபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பிளக்ஸ் பேனர்களை கிழித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மோகன், நாமக்கல் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.* அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வரும், 19ல் ராசிபுரம் சட்டசபை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக அ.தி.மு.க.,வினர், ராசிபுரம் தொகுதி தொடங்கும் இடமான நாமக்கல் மாவட்ட எல்லையில் இருந்து சலையோரம் கட்சி கொடி, பேனர்களை வைத்து வருகின்றனர். அதன்படி, ஏ.டி.சி., டிப்போ அருகே, நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே வைக்கப்பட்டுள்ள, மூன்று பேனர்களை மர்ம ஆசாமிகள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இதை பார்த்த அ.தி.மு.க., தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் சரோஜா ஆகியோரிடம் புகாரளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை