மேலும் செய்திகள்
'ஜொள்ளுங்க... மேடம்!'
18-Mar-2025
சேலம்: சேலம் மாநகராட்சியில் தினமும் குடிநீர் வழங்க, அ.தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.இதுதொடர்பாக சேலம் தெற்கு எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன் பேசியதாவது: சேலம் மாநகராட்சியில் வாரம் ஒருமுறை அல்லது 10 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது செயல்படுத்தப்படும் திட்டம் மூலம் தினமும் அல்லது 24 மணி நேரமும் குடிநீர் வழங்கலாம். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, ''நீர் செல்லும் பாதைகளில் குழாய் உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரியிடம் தெரிவித்து, மாநகராட்சியில் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.தொடர்ந்து எம்.எல்.ஏ., பேசுகையில், ''2008 -- 2009ல் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. புதிதாக சேர்க்கப்பட்ட பகுதியில், 1, 2-வது பேட்ச் பணிகள் நடக்கின்றன. 3, 4 பேட்ச் பணிகள் நடக்கவில்லை. இப்பணிகள் எப்போது முடிக்கப்பட்டு, பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்,'' என்றார்.அதற்கு அமைச்சர் நேரு, ''முடிந்த வரை விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
18-Mar-2025