உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கால்வாய், குடிநீருக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

கால்வாய், குடிநீருக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

கால்வாய், குடிநீருக்குரூ.2 கோடி ஒதுக்கீடுசேலம், அக். 25-சேலம் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவி ரேவதி தலைமை வகித்தார். அதில் பெரிய சோரகை பெருமாள் கோவிலுக்கு சரியான சாலை வசதிக்கு நடவடிக்கை எடுத்தல்; மழைக்காலமாக உள்ளதால் கிராம சாலைகள் சீரமைத்தல்; மாவட்டம் முழுதும் சாக்கடை கால்வாய் சீரமைக்கவும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கவும், மாவட்ட ஊராட்சி குழுவில் இருந்து, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கவுன்சிலர்கள், அவரவர் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து விவாதித்து கோரிக்கைகள் வைத்தனர். துணைத்தலைவர் ராஜேந்திரன், செயலர் அருளாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை