உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.16,000 ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்

ரூ.16,000 ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்

ரூ.16,000 ஒப்படைத்தஆம்புலன்ஸ் ஊழியர்சேலம், நவ. 23-சேலம், கந்தம்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் காயம் அடைந்த முதியவரை, '108' அவசரகால ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அவரிடம் இருந்த, 16,000 ரூபாயை, ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக்குமார், மருத்துவ உதவியாளர் மாதேஷ், அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதனால் ஆம்புலன்ஸ் பணியாளர்களை, சேலம் மாவட்ட, '108' ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை