குழாயில் மீண்டும் உடைப்பு குடிநீர் வினியோகம் பாதிப்பு
வனவாசி: சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே வனவாசி டவுன் பஞ்சா-யத்தில், 12 வார்டுகளில், 1,860 குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஜலகண்டாபுரம் - நங்கவள்ளி பிரதான சாலையில், காஸ் கொண்டு செல்லக்கூடிய பிரதான குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், இரு நாட்களுக்கு முன், வனவாசி பகுதிக்கு செல்லக்கூடிய குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் விநியோகம் பாதிக்-கப்பட்டது.இதுகுறித்து, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கோதை நாய-கியிடம் கேட்டபோது, ''உடைப்பை சரி செய்து, இன்று(நேற்று) குடிநீர் வினியோகிக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது, மீண்டும் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இதனால் குழாய் சீரமைப்பு பணியில், மீண்டும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவாக சரிசெய்து குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.