ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம்
சேலம், பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்க, ஊரக திறனாய்வு தேர்வு நடத்தி, மாவட்டத்துக்கு, 50 மாணவர், 50 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பிளஸ் 2 வரை, ஆண்டுதோறும், 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டு தேர்வுக்கு விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியது. இணையதளத்தில் வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கி, குடும்ப ஆண்டு வருமானம், 1 லட்சம் ரூபாய்க்குள் இருப்பதற்கான வருமான சான்றிதழை இணைத்து, பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக, 10 ரூபாய் வசூலித்து, நவ., 5க்குள் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் உள்ள அதிகபட்ச மாணவர்களும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் அனுபவத்தை பெற விண்ணப்பிக்க செய்யவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.