உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரும் 4ல் சேலம் வரும் அமைச்சர் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

வரும் 4ல் சேலம் வரும் அமைச்சர் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

சேலம்: தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி, சேலம் மாநகர் செயர் ரகுபதி அறிக்கை:சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன் சுற்றுலாத்-துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக வரும், 4 காலை, 11:00 மணிக்கு சதாப்தி ரயிலில் சேலம் வர உள்ளார். அவருக்கு மாவட்ட தி.மு.க., - மக்கள் சார்பில் ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்பு அளிக்கப்படும்.பின் சேலத்தில் உள்ள ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஆறுமுகம் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்-துவார். தொடர்ந்து பூலாவரியில் உள்ள ஆறுமுகம், நெடுஞ்செ-ழியன், ராஜா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துவார். பின் வடக்கு சட்டசபை தொகுதி அலுவலகத்தில் மக்களை சந்திப்பார். அதனால் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட, மாநகர், பகுதி, ஒன்-றியம், பேரூர், கிளை, வார்டு செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதி-நிதிகள், பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி