உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதை வாலிபர் தீக்குளிப்பு

போதை வாலிபர் தீக்குளிப்பு

சேலம்: சேலம் வீராணம் அடுத்த பள்ளிபட்டியை சேர்ந்த டிரைவர் கிரிபாலாஜி, 19. இவர் நேற்று மாலை, 5:30 மணியளவில், அங்குள்ள கோவிலில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அதனை, அவரது குடும்பத்தார் கண்டித்துள்ளனர்.அதனால் ஆவேசமடைந்த வாலிபர், அங்குள்ள டிராக்டரில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, தன்மீது ஊற்றிக்கொண்டு, அவராகவே தீ வைத்து கொண்டார். அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீராணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை