உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வி.சி., கட்சியை கண்டித்து அருந்ததியர் ஆர்ப்பாட்டம்

வி.சி., கட்சியை கண்டித்து அருந்ததியர் ஆர்ப்பாட்டம்

வி.சி., கட்சியை கண்டித்துஅருந்ததியர் ஆர்ப்பாட்டம்சேலம், செப். 20-சேலம், கோட்டை மைதானத்தில் அருந்ததியர் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநகர செயலர் இளையராஜா தலைமை வகித்தார். அதில் அருந்ததிய மக்களுக்கு வழங்கிய, 3 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக செயல்படும், வி.சி., கட்சியை கண்டித்தும், அக்கட்சி சார்பில் அருந்ததிய மக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மறு சீராய்வு மனுவை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதில் பொது செயலர் பிரதாபன், ரஜினி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை