உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏ.டி.எம்., மையத்துக்கு காவலாளி தேவை

ஏ.டி.எம்., மையத்துக்கு காவலாளி தேவை

ஏ.டி.எம்., மையத்துக்கு காவலாளி தேவைமகுடஞ்சாவடி, அக். 5-இளம்பிள்ளையில் தறி, அதன் சார்பு தொழில்களில், ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர், இளம்பிள்ளையில் உள்ள வங்கிக்கு வந்து செல்கின்றனர். அங்கு மட்டும், 10க்கும் மேற்பட்ட, ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இதன்மூலம் தினமும் லட்சக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடக்கிறது. ஆனால், 4 ஏ.டி.எம்., மையங்களுக்கு மட்டும், காவலாளிகள் உள்ளனர். பல இடங்களில் ஏ.டி.எம்., இயந்திரங்களை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் அசம்பாவிதத்தை தவிர்க்க, காவலாளிகள் நியமிக்க, சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்., மைய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை