உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவியை கடத்த முயற்சி: தாய், மகன் கைது

மாணவியை கடத்த முயற்சி: தாய், மகன் கைது

இடைப்பாடி : இடைப்பாடி அருகே குள்ளம்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி, 29. பெங்களூருவில் உள்ள, ஐ.டி., நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது உறவினர் மகள், பிளஸ் 2 படிக்கும் மாணவி. இவர், நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, சைக்கிளில் பால் ஊற்றுவதற்கு குள்ளம்பட்டியில் இருந்து வெள்ளூற்று பெருமாள் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுப்ரமணி, அவரது தாய் பூங்கொடி, 54, ஆகியோர், மாணவியை வழிமறித்து காரில் கடத்த முயன்றனர். மாணவி கூச்சலிட, மக்கள் ஓடிவந்தனர். இதனால் அவர்கள், மாணவியை விட்டு சென்றனர். இதுகுறித்து மாணவி புகார்படி தேவூர் போலீசார் விசாரித்து, சுப்ரமணி, பூங்கொடியை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ