மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி லட்டு ரூ.1.87 கோடிக்கு ஏலம்
18-Sep-2024
தாரமங்கலம், தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான பலவகை உரிம இனங்களுக்கு, கோவில் வளாகத்தில் மறு ஏலம் நடந்தது.அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா தலைமையில், வங்கி வரைவோலை செலுத்தி இருந்தவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர். முதலில் கோவில் முன்பு உள்ள கற்பூரக்கடை, 3.44 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்டது.தொடர்ந்து வாகன பாதுகாப்பு உட்பட ஆறு உரிம இனங்களுக்கு ஏலம் நடந்தது. எட்டு உரிம இனங்கள் சேர்த்து, 9.29 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. முன்னதாக, தாரமங்கலம் சூரமங்கலம் சாலையில் உள்ள, 0.05 சென்ட் காலி இடத்தை, நகராட்சிக்கு ஏலம் கேட்க, அதிகாரிகள் வந்திருந்தனர். கோவில் இடத்தை நகராட்சிக்கு விட்டால், கோவிலுக்கு வருமானம் குறையும் என, கோவில் கோடிக்காரர்கள், ஏலத்தில் கலத்து கொண்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் ஏலம் கேட்காமல் திரும்பினர். செயல் அலுவலர் புனிதராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
18-Sep-2024