உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அனைத்து வார்டிலும் பேனர்:பா.ஜ., கூட்டத்தில் முடிவு

அனைத்து வார்டிலும் பேனர்:பா.ஜ., கூட்டத்தில் முடிவு

மேட்டூர்;மேட்டூரில், பா.ஜ., ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். அதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரும், 7ல் மேட்டூர் அருகே சதுரங்காடியில் நடக்கும் கூட்டத்தில் பேச உள்ளார். இதனால் அவரது வருகை குறித்து ஆலோசித்தனர். இதில் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன், மகளிரணி பொதுச்செயலர் மகேஸ்வரி, தலைவர் தனம், மேட்டூர் நகர தலைவர் நிர்மலா, தொகுதி ஒருங்கிணைப்பாளர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து ராமலிங்கம், கூட்டம் நடக்க இருக்கும் சதுரங்காடியை பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் மாநில தலைவர் வருகையை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் பேனர் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை