அடிப்படை பிரச்னை: எம்.எல்.ஏ., ஆலோசனை
அயோத்தியாப்பட்டணம்; அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., உஷாராணி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்து உஷாராணி கூறுகையில், ''மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து பி.டி.ஓ.,க்களிடம் ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக தட்டுப்பாட்டின்றி குடிநீர் வழங்க அறிவுறுத்தப்-பட்டது. தொகுதி மக்களின் அடிப்படை பிரச்-னைகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.அ.தி.மு.க.,வின், அயோத்தியாப்பட்டணம் ஒன்-றிய செயலர்கள் ராஜசேகரன், மணி, சேலம் புறநகர் மாவட்ட இளைஞ-ரணி செயலர் அருண்குமார் உள்ளிட்டோர் உட-னிருந்தனர்.