உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலை சரிவு

சேலம்: உழவர் சந்தைகளுக்கு பீன்ஸ் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்-துள்ளது.சேலம் மாவட்டத்தில், 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்-படுகின்றன. அங்கு வெள்ளை, பச்சை ரக பீன்ஸ், பெங்களூரு, ஓசூர், ஊட்டி, மேட்டுப்பாளையம், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் சந்தைக்கு பீன்ஸ் வரத்து குறைவாக இருந்ததால், அதன் விலை, 'சதம்' அடித்தது. ஆனால் தற்போது வரத்து அதிக-ரிப்பால் விலை சரிந்துள்ளது.இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது: சந்தைக்கு பீன்ஸ் கொண்டு வரப்படும் பகுதி-களில் தொடர் மழை பெய்தது. செடிகளில் பூ உதிர்ந்து, விளைச்-சலில் பாதிப்பு ஏற்பட்டது. தவிர தசரா, ஓணம், ஆயுத பூஜை உள்-ளிட்ட பண்டிகைகளால் தேவை அதிகம் இருந்ததால் பீன்ஸ் விலை உயர்ந்தது. தற்போது பண்டிகை முடிந்து, தேவை குறைந்-துள்ளது. செடிகளிலும் பீன்ஸ் விளைச்சல் அதிகம் உள்ளது. இதனால் கடந்த அக்., 30ல் வெள்ளை பீன்ஸ் கிலோ, 130 முதல், 135 ரூபாய் வரை விற்றது, தற்போது, 65 முதல், 70 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை விற்பனை கடைகளில், 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் பச்சை ரக பீன்ஸ், 135 முதல், 140 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது, 70 முதல், 75 ரூபாயாக சரிந்துள்ளது. சில்லரை விற்பனை கடைகளில், 85 ரூபாய்க்கு விற்-கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை