கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை
தாரமங்கலம், நவ. 16-தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 1500 க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். அங்கு கூடுதலாக, 10 வகுப்பறைகள் கட்ட, 'நபார்டு' திட்டத்தில், 1.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பூமி பூஜை விழா நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் குணசேகரன், பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். தி.மு.க., நகர துணை செயலர் செல்வமணி, தலைலைமையாசிரியை ஜெயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.