உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லாரி துணி லோடு சாய்ந்து பைக்கில் சென்றவர் பரிதாப பலி

லாரி துணி லோடு சாய்ந்து பைக்கில் சென்றவர் பரிதாப பலி

ஓமலுார்:சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே சிந்தாமணியூரைச் சேர்ந்தவர் தமிழ்மணி, 26. சேலத்தில் உள்ள தனியார் மொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். நேற்று காலை, 7:30 மணிக்கு, அவரது சகோதரரை, ஓமலுாரில் இறக்கி விட்டுவிட்டு, முத்துநாயக்கன்பட்டி வழியே சேலத்துக்கு, பைக்கில் புறப்பட்டார்.அப்போது, குஜராத்தில் பேல் துணி லோடு ஏற்றிக்கொண்டு கோவை சென்ற லாரி சென்று லாரி, ஓமலுார் தாலுகா அலுவலகம் எதிரே ரயில்வே மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது, அதிக பாரத்தால், இடதுபுறம் சாய்ந்தது. இதில் பைக்கில் சென்று கொண்டிருந்த தமிழ்மணி மீது துணிக்கட்டுகள் விழுந்ததில், மூச்சுத்திணறி உயிரிழந்தார்.அவருக்கு முன்புறம், மற்றொரு பைக்கில் சென்றுகொண்டிருந்த, ஓமலுாரைச் சேர்ந்த பழனிசாமி, 61, திருச்சி, தொட்டியத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் நாகராஜ் ஆகியோரும் காயம் அடைந்தனர்.இருவரையும் மீட்ட போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை