உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4ல் கும்பாபிேஷகம் முகூர்த்தக்கால் நடல்

4ல் கும்பாபிேஷகம் முகூர்த்தக்கால் நடல்

ஆத்துார், நரசிங்கபுரம் தர்மராஜர், திரவுபதி அம்மன் கோவிலில், 2 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி மேற்கொண்ட நிலையில், செப்., 4ல் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு சில நாட்களுக்கு முன், 27 அடி உயரத்தில் கொடி மரம் அமைக்கப்பட்டது. நேற்று கணபதி ேஹாமம், தீர்த்தக்குட சிறப்பு பூஜை, யாகம் நடந்து, முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. விழாக்குழுவினர், கோவிலை சுற்றி ஊர்வலமாக சென்று, முகூர்த்தக்கால் நட்டனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !