உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில், பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்த பா.ஜ., முடிவு

கோவில், பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்த பா.ஜ., முடிவு

ஏற்காடு: ஏற்காடு டவுனில், பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். அதில், வரும் சுதந்திர தினத்தன்று, கொடி அணிவகுப்பு, கோவில், பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல், ஏற்காட்டில் வீடுதோறும் சென்று மக்களுக்கு கொடியை கொடுத்து அனைவரது வீடுகளிலும் ஏற்ற வைப்பது குறித்து ஆலோசித்து தீர்மானங்களாக நிறைவேற்றினர். பா.ஜ.,வின், எஸ்.சி., அணி மாநில முன்னாள் துணை தலைவர் மதியழகன், சேலம் மாவட்ட துணை தலைவர் சிவராமன், ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை