உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் மிதந்த காவலாளி சடலம் மீட்பு

கிணற்றில் மிதந்த காவலாளி சடலம் மீட்பு

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு அருகே தனியார் கிரானைட் நிறுவனம் உள்ளது. அங்கு இரவு நேர காவலாளியாக, அம்மாபேட்டையை சேர்ந்த வேலுசாமி, 64, பணிபுரிந்தார். பராமரிப்பு பணி நடப்பதால், சில நாட்களாக அந்நிறுவனத்தில் பணி எதுவும் நடக்கவில்லை. வேலுசாமியும் வேலைக்கு வர-வில்லை. ஆனால் நேற்று அங்குள்ள கிணற்றில், வேலுசாமி உடல் அழுகிய நிலையில் மிதந்தது தெரியவந்தது. செவ்வாய்ப்-பேட்டை தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர். அவர் எப்-படி இறந்தார் என, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை