உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவன் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவன் உடலுறுப்புகள் தானம்

சேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராபாளைத்தை சேர்ந்த பெரியசாமி, பரிமளா தம்பதியின் இளைய மகன் வினோத், 12. இவர் அங்குள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். செங்கல் சூளையில் வேலை செய்யும் தம்பதி, கேரளாவுக்கும் சென்று வேலை செய்து மகனை படிக்க வைத்து வந்தனர்.கடந்த, 24ல் சக மாணவர்களுடன் வினோத் நடந்து சென்றபோது சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், 27ல் மாணவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது பெற்றோரிடம், மாணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதையேற்று மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். தொடர்ந்து டீன் மணி தலைமையில் மூளை நரம்பியல், மயக்கவியல், பொது மருத்துவம் உள்ளிட்ட துறைகள் அடங்கிய மருத்துவ குழுவினர், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு உடல் உறுப்புகளை தானம் பெற்றனர். குறிப்பாக இதயம், கல்லீரல், தலா இரு கண்கள்; சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. உடனே, 'கிரீன் காரிடார்' உருவாக்கப்பட்டு அவை, சாலை மார்க்கமாக கோவை, சென்னை, மதுரை மருத்துவமனைகளுக்கு தனித்தனியே அனுப்பப்பட்டன. சேலம் அரசு மருத்துவமனையில், 12 வயது மாணவரிடம் உடல் உறுப்புகள் தானம் பெற்றது இதுவே முதல்முறை என, மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். பின் மாணவர் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ