உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காவேரி மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

காவேரி மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

சேலம், உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான, 'பிங்க்டோபரை' முன்னிட்டு, சேலம் காவேரி மருத்துவமனை, சவுடேஸ்வரி மகளிர் கல்லுாரி இணைந்து, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை, நேற்று நடத்தின. மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி அபிராமி, கல்லுாரி முதல்வர் பூங்கொடி ஆகியோர், கல்லுாரி வளாகத்தில் கொடி அசைத்து, பேரணியை தொடங்கி வைத்தனர்.அதில் மாணவியர், பேராசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என, 250க்கும் மேற்பட்டோர், விழிப்புணர்வு தொடர்பான முழக்கங்களை எழுப்பியபடி, 2.5 கி.மீ., முக்கிய வீதிகளில் நடந்து சென்றனர். முன்னதாக, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார், மகளிர் மருத்துவ நிபுணர் சத்யா ஆகியோர், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, அந்நோயை ஆரம்பத்தில் கண்டறிவதன் அவசியம் குறித்து, மாணவியர், மக்களிடம் எடுத்துரைத்தனர். மார்பக புற்றுநோய் குறித்த அச்சத்தை போக்கி, பெண்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தகவலை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த கூட்டு முயற்சியின் நோக்கம் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ