மேலும் செய்திகள்
வீடு முன் நிறுத்தியிருந்த 2 மொபட் எரிந்து நாசம்
10-Oct-2024
ஆத்துார்: ஆத்துார், கடைவீதியை சேர்ந்த, கங்காதரன் மனைவி பெரியம்மாள், 70. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது வீட்டில் இருந்த, 'ப்ரிட்ஜ்' வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதில் அவரது ஓட்டு வீடு மட்டுமின்றி, அருகே உள்ள அவரது மகன் ராஜசேகரின் ஓட்டு வீடும் தீப்பற்றி எரிந்தன. கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இதில் இரு வீடுகளில் இருந்த துணிகள், மளிகை பொருட்கள், ப்ரிட்ஜ், 'டிவி' உள்பட, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் எரிந்து நாசமானது. ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Oct-2024