வீட்டு தோட்டம் அமைக்க செடி, விதை பெற அழைப்பு
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியா அறிக்கை:ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டத்தில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், கொத்தவரங்காய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் மற்றும் வீட்டு தோட்டம் அமைக்கும் மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். செடி, விதை தேவைப்படுவோர், ஆதார் நகலுடன் பனமரத்துப்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.