உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கேமரா சேதம்: வாலிபர் கைது

கேமரா சேதம்: வாலிபர் கைது

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே பைப்பூரை சேர்ந்தவர் புள்ளையண்ண கவுண்டர், 36. அங்குள்ள விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார். அந்த கோவிலில் இருந்த, 5 'சிசிடிவி' கேமராவை அதே பகுதியை சேர்ந்த தனபால், 20, என்பவர் நேற்று சேதப்படுத்தினார். இதுகுறித்து தர்மகர்த்தா கேட்க, அவரை, தனபால் திட்டியதோடு அடித்துள்ளார். தர்மகர்த்தா புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரித்து, தனபாலை கைது செய்து, ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி