உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுத்தையை கண்காணிக்க கேமரா பொருத்தம்

சிறுத்தையை கண்காணிக்க கேமரா பொருத்தம்

சங்ககிரி, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒருக்காமலை அடிவார வடக்கு பகுதியில் உள்ள மரம்பழத்தான்காட்டில், சிறுத்தை நடமாடியதை, அப்பகுதி விவசாயி ராஜ்குமார், 47, படம் எடுத்தார். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்டோர், பல்வேறு குழுக்களாக பிரிந்து, சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். மேலும் விவசாயி படம் எடுத்த இடத்தில் ஒரு கேமரா பொருத்தி, வனத்துறையினர் கண்காணிக்கின்றனர். கால்நடைகளை காக்க, சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி