உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கேப்டன் குருபூஜை பேரணி; 2,000 பேர் பங்கேற்க முடிவு

கேப்டன் குருபூஜை பேரணி; 2,000 பேர் பங்கேற்க முடிவு

சேலம்: தே.மு.தி.க.,வின், சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், நெத்திமேட்டில் செயல் வீரர் கூட்டம் நேற்று நடந்தது. கொண்டலாம்பட்டி பகுதி செயலர் செந்தில் தலைமை வகித்தார்.அதில், கொள்கை பரப்பு செயலர் மோகன்ராஜ் கூறுகையில், ''கேப்டனின் குரு பூஜை முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் வரும், 28ல் நடக்க உள்ள அமைதி பேரணியில் அனைவரும் பங்கேற்று, சேலம் கேப்டனின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து மாநகர் மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''குருபூஜையில் சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், 2,000 பேர் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.அவைத்தலைவர் செல்வகுமார், துணை செயலர் ராஜி, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை