உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் மீது கார் மோதி விபத்து: அ.தி.மு.க., மாஜி கவுன்சிலர் பலி

மொபட் மீது கார் மோதி விபத்து: அ.தி.மு.க., மாஜி கவுன்சிலர் பலி

ஆத்துார், நவ. 12-மொபட் மீது கார் மோதிய விபத்தில், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் உயிரிழந்தார்.ஆத்துார் அருகே, செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம், 60. அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரான இவர், மளிகை கடை வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் செல்லியம்பாளையத்தில் இருந்து, கொத்தாம்பாடி நோக்கி 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட்டில் சென்றார். அப்போது சென்னையில் இருந்து, கோவை நோக்கி சென்ற 'சுசூகி - ஷிப்ட் டிசையர்' கார், மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வம், ஆத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின், மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று, அவர் உயிரிழந்தார்.ஆத்துார் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி